கோடநாடு விவகாரம்: முதல்வர் குறித்து ஸ்டாலின் பேச தடைகோரிய மனு தள்ளுபடி

Default Image

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் புகார்  தெரிவிக்கப்பட்டது.

இதில் மாத்யூ சாமுவேல் சயன், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பின் இந்த வழக்கில்  சயன், மனோஜுக்கு ஜாமின் வழங்கி விடுவித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளித்ததையடுத்து எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பின்னர் உதகை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனுவில் சயன், மனோஜ்க்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

இதனால் சயான், மனோஜ் இருவரும் உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது.

Image result for பழனிச்சாமி ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது கோடநாடு விவகாரம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடை கோரி அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.மேலும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்