உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி
பருத்தியை நாம் ஆடையாக அணியும் போது நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கும். அதை நாம் உணவாக உட்கொள்ளும் போது அது நமக்கு பல விதமான நோய்களை குணப்படுத்தும் மிக சிறந்த காரணியாக விளங்குகிறது.
- பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி?
இது நமது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனையும் இது சரி செய்யும்.இது பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.பருத்திப்பால் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பருத்தி பால் -100 கி
மில்க்மெய்டு-அரைகப்
சுக்கு -1துண்டு
கோவா -100 கி
நெய்-தேவையான அளவு
முந்திரி -6
செய்முறை:
முதலில் பருத்தியை விதையுடன் சேர்த்து 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பருத்தி நன்கு ஊறியவுடன் கிரைண்டரில் அரைத்து எடுத்து ஒரு மெல்லிய துணியை வைத்து வடித்து பருத்தி பாலை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அதற்கு பிறகு வெல்லத்தை இடித்து வைத்து கொள்ளவும். சுக்கை பொடியாக்கி கொள்ளளவும். அதற்கு பிறகு ஒரு பாத்திரத்தை வாணலியில் வைத்து பருத்தி பாலை ஊற்றி அதனுடன் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை ஒரு மடங்காக வரும் வரைக்கும் நன்கு கொதிக்க விடவும்.
கலவை நன்கு கொதித்ததும் கோவாவை சேர்க்கவும்.அதன் பின்னர் மில்க் மெய்டு சேர்க்க வேண்டும்.பின்பு பொடித்து வைத்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளற வேண்டும். கலவை கெட்டியானவுடன் சுக்கு மற்றும் நெய் சேர்த்து இறக்க வேண்டும். முந்திரியை துருவி சேர்த்தால் அல்வா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது சூடான சுவையான பருத்திஅல்வா ரெடி.