முகத்தில் தேவையில்லாத முடியின் வளர்ச்சிகளினால் பெரிதும் அவதிபடுகிறீர்களா இதோ அதை போக்க சூப்பர் டிப்ஸ்

Default Image

அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை.

முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்:

 

பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் சுரக்கும் ஹார்மோன் இன்பலன்ஸ், PCOD பிரச்சனை,ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி முதலியவற்றை சரிவர கவனிக்காமல் அப்படியே விட்டு விடுவது இவை அனைத்தும் தான் நமக்கு மிக பெரிய ஆபத்து.இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுவதால் நமது உடலுக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்துகொள்வோம்.

கடலைமாவு :

 

கடலை மாவு முகத்தில் வளரும் தேவையற்ற முடிவளர்ச்சியை தடை செய்வதற்கு மிக சிறந்த மருந்தாக விளக்குகிறது.கடலை மாவுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து அந்த கலவையை கொண்டு முகத்தை மசாஜ் செய்து வர முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கி முகம் பொலிவாகவும் ,அழகாகவும் மாறும். இதனை வாரம் 4-5 முறை பயன்படுத்தலாம்.

கடலைமாவு ,தயிர் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.இந்த முறையை பயன்படுத்துவதால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

குப்பைமேனி :

குப்பைமேனி இலை ,வேப்பங்கொளுந்து , விராலிமஞ்சள் ஆகியவற்றை சேகரித்து வைத்து கொள்ள கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் மாவு போல் நன்றாக அரைத்து இரவு தூங்குவதற்கு செல்லும் முன்பு தேவையற்ற முடி இருக்கும் இடங்களில் பூசவும் அசிங்கமாகவும்,அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து சருமம் அழகு பெறும்.

சர்க்கரை:

 

 

தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் வழிமுறைகளில் சர்க்கரையும் பெரும் பங்கு வகிக்கிறது. சர்க்கரையை நீரில் கலந்து ,அதனை கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால் அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

முட்டை:

 

 

முட்டை வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் அனைத்தும் முகத்தில் தடவ வேண்டும்.காய்ந்தவுடன் மெதுவாக  பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வரும்.

கஸ்தூரி மஞ்சள்:

 

முந்தைய காலகட்டத்தில் மஞ்சளை உபயோகபடுத்தாத பெண்களே இருக்க முடியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் மஞ்சளை பயன்படுத்துவதே இல்லை. இதனால் தான் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.மஞ்சள் நமது சருமத்திற்கு மிக சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

கஸ்தூரி மஞ்சள் 1ஸ்பூன்,காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகிய இரண்டையும் சேர்த்து முகத்தில் பூச வேண்டும்.தினமும் இவ்வாறு செய்து வர நாளடைவில் முடி உதிர்ந்து முகம் அழகு பெறும்.

பப்பாளி :

 

 

பப்பாளி பல சத்து மிகுந்த பழமாகும்.இந்த பழத்தை உண்டாலோ அபரிமிதமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். இந்நிலையில் இது பலவிதமான சரும பிரச்னைகளை சரி செய்யும் காரணியாகவும் விளங்குகிறது.

பப்பாளி மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து அதனை முகத்தில் முகத்தில்  முடிவளரும் இடங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும் இதன் மூலம்  இந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்