பதபதவென பதட்டப்படவைத்து.. கடைசி ஒவரில் மீண்டும் வெற்றி பெற்ற சென்னை சிங்கங்கள்!!
சென்னை அணி மீண்டும் தன் ரசிகர்களை உச்சக்கட்ட சோதனைக்கு உள்ளாக்கி கடைசி ஓவரில் வெற்றி பெற்றுள்ளது
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது .
பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓரளவிற்கு தடுத்து ஆடினார்.
படுமோசமாக திணறிய சென்னை அணியை கப்பல் மாலுமி போல் அற்புதமாக திசைதிருப்பி சரிவில் இருந்து மீட்டார் தோனி. அற்புதமாக ஆடிய தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து சென்னையை கரை சேர்த்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 175 ரன்கள் விளாசியது.
இறுதியாக ஒரு கட்டத்தில் எளிதாக சென்னை அணி ராஜஸ்தானை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடையில் வந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் அந்த அணிக்கான வெற்றிப் பாதையை உருவாக்கினர். அதன் பிறகு வந்த ஆல்ரவுண்டர் சோப்ரா ஆச்சர் நன்றாக ஆடினார். இப்படியே செல்லச்செல்ல பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 46 ரன்களும் சோப்ரா ஆச்சர் 11 பந்துகளில் 24 ரன்கள் விளாசி இருந்தனர்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார் பென் ஸ்டோக்ஸ். பின்னர் அடுத்த ஐந்தாவது பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்த அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை தேடி தந்தார் பிராவோ.
இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் ஏற்றம் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது