ஐபில் 2019: மும்பையுடன் கெத்து காட்டிய ராகுல்!8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி
மும்பையுடம் மோதிய போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
இன்றைய ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் சிறப்பாக அமைந்தது.ரோகித் 32 ரன்களிலும்,டி-காக் 60 ரன்களிலும் வெளியேறினார்கள்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் யுவராஜ் 18 ,சூரியகுமார் 11,பொல்லார்ட் 7,க்ருனால் பாண்டியா 10,ஹர்டிக் பாண்டியா 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் அடித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் முருகன் அஸ்வின்,சமி,ஹார்டஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் 177 ரன்கள் இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் தொடக்க முதலே சிறப்பாக ஆடி வந்தார்.அதேபோல் கிறிஸ் கெய்ல் 40,அகர்வால் 43 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.களத்தில் ராகுல் 71*,மில்லர் 15 * ரன்களுடன் இருந்தனர்.
இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.