தேர்தல் நேரத்தில் தைரியமாக வெளியான சூர்யாவின் உறியடி 2 பட ப்ரோமோ காட்சிகள்
- உறியடி முதல் இரண்டு பாகத்தையும், விஜய் குமார் இயக்கி நடித்துள்ளார்.
- இரண்டாம் பாகத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
- இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது.
2016ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி அவரே தயாரித்து, நடித்து வெளியாகி தமிழ்சினிமாவில் நல்ல வரவேற்பையும், ஜாதி அரசியலையும் தோலுரித்து காட்டிய திரைப்படம் உறியடி. இப்படத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட ஜாதி கட்சியின் தலையீட்டால் அவர்களது வாழ்வு எப்படியெல்லாம் திசை மாறுகிறது என சமரசம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் உறியடி.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டது. இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது . இப்படத்தையும் விஜய் குமார் இயக்கி நடித்துள்ளார். தனது 2 டி என்டெர்டெய்ன்ட்மென்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சில காட்சிகள் வெளியாகின. இதில் தேர்தல் ஒட்டு பணம் , தனியார் காப்பர் நிறுவனம் திறப்பு பற்றிய அரசியல், ஜாதி அரசியல் என பல இடம்பெற்றன. இந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.
DINASUVADU