பாமக சின்னம் மாம்பழமா?ஆப்பிளா ? பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட அமைச்சர் சீனிவாசன்
பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தவறுதலாக கூறினார் அமைச்சர் சீனிவாசன்.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் முக்கிய தலைவர் சிலர் வாய் உளறி மாற்றி பேசி விடுகிறார்கள்.இப்படி உளறுவது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன் அதிமுகவின் ஆரணி தொகுதி மக்களவை வேட்பாளார் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ் .அப்போது கூட்டத்தில் பேசுகையில் , திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று ராமதாஸ் தவறுதலாக கூறினார்.பின்னர் சுதாரித்த அவர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சமாளித்து விட்டார்.
இந்த வகையில் தற்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமகவுக்கு ஆதரவு கேட்டு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உளறியுள்ளார்.அதாவது நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசி கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசுகையில், பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தவறுதலாக தெரிவித்துவிட்டார்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் அங்கிருந்தவர்கள் திருத்தி கூறிய பின்பு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டார்.இதனால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.பின்பு அங்கிருந்தவர்கள் திருத்தி கூறிய பின்பு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டினார்.இதை கேட்ட பாமக தலைவர் ராமதாஸ் பார்த்து சிரித்திக் கொண்டிருந்தார்.