திப்பிலியில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

Default Image
  • திப்பிலியில் உள்ள மருத்துவ குணங்களும், அதனால் குணமாகும் நோய்களும்.

திப்பிலி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். திப்பிலியை அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்படுகிறது. மேலும், இது சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது.

Related image

திப்பிலி பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.

இளைப்பு

Related image

இளைப்பு நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த நோய் உள்ளவர்கள், திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கி பூரண சுகம் பெறலாம்.

இருமல்

Image result for இருமல்

இருமல் உள்ளவர்களுக்கு திப்பிலி ஒரு சிறந்த தீர்வை தருகிறது. இருமல் உள்ளவர்கள் திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல் நீங்கி பூரண சுகம் பெறலாம்.

பசியின்மை

திப்பிலிக்கு பசியின்மையை போக்கும் தன்மை உள்ளது. பயின்மை உள்ளவர்கள்,  திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கும்.

Related image

மேலும், தாது இழப்பு குணமாக்குகிறது.  இரைப்பை, ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

சுவாச நோய்கள்

ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிக்கக் கூடிய நோய் ஆகும். இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பது மிகுந்த சிரமமாக இருக்கும்.

Image result for சுவாச நோய்கள்

இத்தகைய நோய்கள் தீர திப்பிலிபொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்சனைகளை ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுகம் கொடுக்கக் கூடிய ஆற்றல் திப்பிலிக்கு அதிகமாக உள்ளது.

Image result for மாதவிடாய்

இதற்கு தீர்வாக திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.

சர்க்கரை நோய்

Image result for சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு திப்பிலி ஒரு சிறந்த மருந்தாகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்