ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவல்

Default Image

ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Image result for தினகரன் பரிசு பெட்டி

ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உச்சநீதிமன்றம்  தேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

Image result for தினகரன் பரிசு பெட்டி

இந்நிலையில் பரிசுப்பெட்டி  சின்னம் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது என்றும்  இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளார் . அமமுகவினார் போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்