பழநியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக்கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோவில்களில்  தைப்பூசம்,பங்குனிதிருவிழா,சுரசம் ஹாரம் முதலிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது.

இந்தத்தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்.  இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள்  அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தேய்பிறை அஷ்டமிக்கும் பழனி திருஆவினன்குடியில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் நேற்று பைரவருக்கு பால்,தயிர் மற்றும் தண்ணீரால் சிறப்பு அபிஷேகம் செய்யபட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.அதற்கு பிறகு வெள்ளி கவச அலங்காரத்தில் தீபஆராதனையும் நடத்தப்பட்டது. மேலும் பல நிவர்த்தி கடன்களையும் பக்தர்கள் செய்தார்கள்.

Leave a Comment