உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை விரும்புபவரா நீங்கள்? அப்ப உங்க குழந்தைக்கு இத கொடுங்க
பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மிக முக்கியமாக கருதுவார்கள். குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும், அதே நேரம் அவர்களுக்கு பிடித்த வகையிலும் உணவுகள்இருக்கவேண்டும்.
அந்த வகையில் காய்கறி சூப் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. இப்பொது காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கோஸ் – 50 கிராம்
- பீன்ஸ் – 50 கிராம்
- கேரட் – 50 கிராம்
- சோளமாவு – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
- பட்டை லவுங்கம் – சிறிதளவு
- பிரியாணி இலை – சிறிதளவு
- மிளகு தூள் – 2 தேக்கரண்டி
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
செய்முறை
ஒரு வாணலியில், வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும் மூன்று தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகும் காய்கறியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாற வேண்டும். தேவைப்பட்டால் கான்பிளக்ஸை எண்ணணெய்யில் பொறித்து மேலே தூவி பரிமாறலாம். சுவையான காய்கறி சூப் தயார்.