சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இதை சாப்பிடுங்க
- எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய்கள் தான். இந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான்.
நமது உணவு முறைகளால் தான் நமக்கு இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. என்றைக்கு நாம் நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளை சாப்பிட தொடங்கினோமோ அன்றைக்கே நமது உடல் ஆரோக்கியம் கெட்டு போய்விட்டது.
மேலை நாட்டு உணவுகளான, பாஸ்ட் புட் உணவுகள் நமது உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கிய கேடுகளை உண்டு பண்ணுகிறது.
நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ள இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
சிவப்பு குடைமிளகாய்
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் சிவப்பு குடை மிளகாய் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
மேலும், இது புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
முளைகட்டிய தானியங்கள்
முளைகட்டிய தானியங்கள் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.
முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.
வெங்காயம்
நமது சமையல்களில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது வெங்காயம். அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மீன்
மீன் அனைவருக்கும் பிடித்தமான உணவு தான். மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இவை சிறுநீரகத்தை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது.
சால்மன், ரெயின்போ ட்ரூட், கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் மற்றும் சூரை மீன்களை சாப்பிட்டு வந்தால் அது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.
காலிஃபிளவர்
காலிபிளவர் நம்மில் அநேகர் விரும்பி உண்ண கூடிய ஒரு காய்கறி தான். இதில், வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்க கூடிய ஆற்றல் கொண்டது.
முட்டை வெள்ளை கரு
சிறுநீரக நோய் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவது மிகவும் நல்லது. முட்டையின் வெள்ளைக் கருவில் அமினோ ஆசிட்டுகள் அதிகமாகவும் மற்றும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. எனவே இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடியது.