சர்க்கரை நோய் வருவதற்கும் இதுவும் ஒரு காரணம்

Default Image
  • சர்க்கரை நோய் வருவதற்கு இந்த உணவுகளும் ஒரு முக்கிய காரணம்.

இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் பரம்பரையாக வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்த நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் நமது உணவு முறைகள் தான். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை நாம் விரும்பி உண்பதால் தான் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள்

மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகமாக இருக்கும். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டவுடன் விரைவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

Image result for மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள்

இன்று அதிகமானோர் அவதிப்படும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக மைதாவினால் செய்யப்பட்ட இந்த உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் சத்துக்களே இராது.

மைதாவினால் செய்யப்படும் உணவுகள் வெறும் கலோரிகளை கொண்டு செய்யப்படும் உணவுகள். இந்த உணவுகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமைகளாகி விடுகின்றனர்.

உடல் பருமன்

சிறு வயதிலேயே மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவதனால், பெரியவர்கள் ஆகும் போது, அதற்கு அடிமைகளாகி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.

Image result for உடல் பருமன்

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடும் போது, இந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதனால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் ஏற்படுகிறது.

உடலுக்கு தேவையான நார்சத்து மைதாவில் இல்லாமல் இருப்பது , உடல் ஆரோக்கியத்துக்கு பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முக்கியமாக மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Image result for சர்க்கரை நோய்

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய் வருவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

மைதா உணவினால் இளம் வயதிலேயே, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படித்தால், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்