இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகள்

Default Image

இஸ்லாம் என்ற சொல்லின் மூல பொருள்  சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல் ஆகும். அதாவது இந்த வினை பெயர்ச்சொல் ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களை இது குறிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, நம்மை  அவரிடம் ஒப்படைத்து, அவரை  வழிபடுவது என்பதாகும்.

இஸ்லாத்தின் இந்து கடமைகள் அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.

கலிமா :

கலிமா  என்பது அல்லாஹ் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்.

தொழுகை :

பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள் ,மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.

நோன்பு :

நோன்பு என்பது இசுலாமிய மதத்தின் உள்ள நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோன்பிருப்பது வழக்கம். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் முதல் மாலையில் சூரியின் மறையும் வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தங்கள் உடலையும் உள்ளத்தையும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருப்பதாகும். நோன்பை பற்றி குரான் இவ்வாறு கூறுகிறது.

ஜகாத் :

ஜகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் என பல அர்த்தங்கள் உண்டு. இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதத்தை  ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இந்த கடமையை ஏழை இசுலாமியர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . ஜகாத் எட்டுக்கூட்டத்தாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என அல்குர்ஆன் கூறுகின்றது. ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் ஜகாத்  கொடுக்கப்படுகிறது.

ஹஜ்ஜு:

ஹஜ்ஜி என்பது இசுலாமியர்களுக்கான புனித யாத்திரை ஆகும். உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு பொருளாதார சக்தியும், உடல் வலுவும் இருக்கும் பட்சத்தில் மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வது ஹஜ்ஜு என்று அழைக்கப்படுகிறது. இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதனையும் நிறத்தால், இனத்தால், மொழியால் யாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை என்பதையும் உணர்த்த மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும்.

இறைவனுக்கு அடிபணிதலையும் நிரூபிப்பதாகும். இது இசுலாமிய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ்  மாதத்தின் 8 இல் இருந்து 10 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த யாத்திரை செய்ய வசதி இல்லாதோர்க்கு இது கடமை இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்