தேர்தல் நேரத்தில் விதியை மீறினாரா பிரதமர் மோடி!ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

Default Image

இந்திய தேர்தல் ஆணையம்  ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றது.

குறிப்பாக தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் எதிர்க்கட்சிகள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

Image result for sitaram yechury

இந்நிலையில் மிஷன் சக்தி திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர  மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.மேலும் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்த புகாரில், திட்டம் வெற்றியடைந்தது பற்றி சம்பந்தப்பட்ட துறை விஞ்ஞானிகள்தான் அறிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for modi election commission

இதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம்  ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து, அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனே ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்