சிக்கன் சுக்கா செய்வது எப்படி ?
- சிக்கன் சுக்கா செய்வது எப்படி?
இன்றைய நாகரீகமான உலகில் மக்கள் அதிகமாக நாகரீகமான உணவுகளை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக மக்கள் சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பதுண்டு.
இன்றைய பதிவில் நாம் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் – அரை கிலோ
- வெங்காயம் – 3
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- மிளகு தூள் – அரை டீஸ்பூன்
- சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
- மல்லிதூள் – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். மேலும், அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இந்நிலையில், நன்றாக வதக்கிய பிறகு சிக்கன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மேலும் அதனுடன், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு குறைவான தீயில் 20 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
அதன்பிறகு சிக்கன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் சுக்கா தயார்.