பாகுபாடு இல்லாமல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது : சத்ய பிரதா சாஹு
- தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 1011 வழக்குகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விதிமீறல்களில் ஈடுபட்ட கட்சியினர் மீது பாகுபாடு இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளை வைத்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 1011 வழக்குகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விதிமீறல்களில் ஈடுபட்ட கட்சியினர் மீது பாகுபாடு இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.