தோனியை போல் நான் பலமிக்கவனல்ல !இரட்டை சத நாயகன் ரோஹித் ஷர்மா விளக்கம் …
சூழ்நிலைகளை, பிட்ச், களவியூகம் உள்ளிட்டவையை நான் ஆய்ந்த பிறகே முடிவெடுப்பேன். தொடக்கத்தில் அது சுலபமல்ல. முதலில் சில ஓவர்களைத் தள்ளுவோம் என்றே ஆடுவேன்.
நான் ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி, கிறிஸ் கெய்ல் போல் பலமிக்கவனல்ல. நான் எனது மூளையைப் பயன்படுத்தி களவியூகத்துக்கு எதிராக விளையாடுவேன்.
என்னுடைய பலம் பந்து வரும் திசைக்கு நேராக ஆடுவது. சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல, என்னை நம்புங்கள். இது நிறைய பயிற்சி மற்றும் கடின உழைப்புக்குப் பிறகே சாத்தியமாவது. கிரிக்கெட்டில் எதுவும் எளிதல்ல. தொலைக்காட்சியில் பார்க்க எளிதாகத் தெரியும்.
அவர்கள் அமைத்த களவியூகத்தை எனக்குச் சாதகமாக்கினேன். அதனால்தான் ஸ்கூப் ஷாட்களை அதிகம் ஆடினேன். அது என்னுடைய பலமாகக் கருதுகிறேன்” என்ற ரோஹித் சர்மா நேற்று தனது திருமண நாள் கொண்டாட்டத்தில் இரட்டைச் சதத்தை மனைவிக்கு பரிசாக அளித்தார். நேற்றைய போட்டியின் முடிவில் அவர் இவ்வாறு கூறினார்.