ஜெயலலிதா அண்ணன் மகன் தீபனிடம் 4 மணி நேரம் விசாரணை

Default Image

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு அதன் மீதான விசாரணை தீவிரபடுத்தபட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேரா சிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர் ஆகியோர் விசாரணையில்  ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி தீபக் இன்று விசாரணை ஆணையத்தின் முன் ஆஜர் ஆனார். அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. தீபக் கொடுத்த தகவல்களை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.

விசாரணைக்கு பிறகு தீபக் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன். மேலும், சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.’ என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்