சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களின் துரதிர்ஷ்டம்-நடிகை தமன்னா அதிரடி
தனது திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் போட்டி ,பொறாமை, பயம் ஏற்படும். கதாநாயகிகளின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக தமன்னா வலம் வருகிறார். சினிமாவில் ஒரு நடிகையின் வாய்ப்பை மற்றொரு நடிகை பறித்து கொள்கிறார் என பேசப்படுகிறது.
ஆனால் தமன்னா இதை மறுத்து உள்ளார் அவர் கூறுகையில்,ஒவ்வொருவருக்கும் சினிமா வாய்ப்பு அவர்கள் கையில் தான் உள்ளது. ஒருவருடைய பட வாய்ப்பை மற்றறொருவர் தட்டி பறிக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. நடிகைகள் மத்தியில் நட்பு இருக்காது என நினைப்பது தவறு.
இரண்டு நடிகைகள் நண்பர்களாக இருந்தால் உலக அதிசயம் மாதிரி பார்க்கிறார்கள்.
இயக்குனர்கள், நடிகைகள் ஆகியோர் நண்பர்களாக இருப்பதை பார்த்து இருக்கிறேன்.அனைவருக்கும் அவர்கள் தொழில்களில் போட்டிகள் கண்டிப்பாக இருக்கும்.
தனது திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் போட்டி ,பொறாமை, பயம் ஏற்படும். கதாநாயகிகளின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
சில நடிகைகளுக்கு திறமை இருந்தும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்” என தமன்னா கூறினார்.