இளைஞர்கள் தான் டார்ச் லைட் பேட்டரி…. அனிதா தான் ஸ்விட்ச்…. கமலஹாசன் அதிரடி…..
- மக்கள் நீதி மய்யம் சார்பில், கோவையில் பொது கூட்டம் நடைபெற்றது.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், கோவையில் பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன், அனிதா தற்கொலை, விவசாயிகள் போராட்டம், நெடுவாசல், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்கள் பற்றி இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ” ஜல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள்தான் இந்த டார்ச்லைட்டுக்கு முதல் பேட்டரி. துணிந்து நின்ற போராட்டக்காரர்கள்தான் டார்ச்லைட்டுக்கு அடுத்த பேட்டரி. அனிதா தான் டார்ச்லைட்டின் சுவிட்ச்” என்று கூறியுள்ளார்.