பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் ,பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என சர்ச்சையாக பேசிய ராதாரவி.
இதற்கு முன்பு சினிமாவில் கடவுள் வேடத்தில் நடிக்க கே.ஆர்.விஜயாவை தான் நடிப்பார்கள். தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
மேலும் கூறுகையில் , பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கூறினார் ராதாரவி.
இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து உள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி, சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள்.
அவர்களுடன் நயன்தாராவை ஒப்பிடுவது வருத்தத்தை தருகிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் சினிமாவிலோ இருந்ததே பெரிய விஷயம் . நயன்தாராவை பற்றி வராத செய்திகள் கிடையாது.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் பிறகு மறந்து விடுவார்கள் .நயன்தாரா பேய் வேடத்திலும் , சீதா வேடத்திலும் நடிக்கிறார்.