திமுக – வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவி நீக்கம் : அன்பழகன்
- ராதா ரவி, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவை கேவலமாக விமர்சனம் செய்துள்ளார்.
- ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
ராதாரவி திமுகவில் உறுப்பினர் பதவியில் உள்ளவர். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் கொலையுதிர்காலம் என்ற படம் உருவாக்கி வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ராதாரவி பேசினார்.
அப்போது பேசிய ராதா ரவி, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவை கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது, ” நயன்தாராவை நடிகர் திலகம், புரட்சி தலைவர் போன்ற இவர்களது பட்டியலில் சேர்த்திக்காதீர்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் அவர்களுடன் நயன்தாராவை சேர்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அவர் பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். பார்த்தவுடன் கும்பிடுகிறவர்களையும் போடலாம், பார்த்தவுடன் கூப்பிடுவபவர்களையும் போடலாம் என்று கூறியுள்ளார். மேலும் கொலையுதிர் காலம் திரைப்படம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதற்க்கு தமிழகமெங்கும் எதிர்ப்பின் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில், கவனத்தை ஈர்க்க அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். மூளையில்லாதவர் அவர். அவர் பேசியதைக் கேட்டு பார்வையாளர்கள் கைதட்டியது கவலையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மேலும் அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை டேக் செய்து ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் கழகப் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இவர் கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.