27 பந்துகளுக்கு 78 ரன்!! பேயாட்டம் ஆடிய ரிஷப் பன்ட்!! மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!
- மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 27 பந்துகளுக்கு 78 ரன் குவித்து பேயாட்டம் ஆடி உள்ளார்
டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர்.
அதன் பின்னர் வந்த டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேயாட்டம் ஆடினார். மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். மொத்தம் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார் ரிஷப் பண்ட். இதில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். தற்போது மும்பை அணிக்கு 214 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது