குழந்தையை பற்றி எனது கணவர் நாகசைதன்யாவிடம் கேளுங்கள்-நடிகை சமந்தா
சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக சமந்தா கூறினார். குழந்தையை பற்றி நான் கூற முடியாது மேலும் தெரிந்து கொள்ள நாகசைதன்யா விடம் கேளுங்கள் என சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் , தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். அவர் தமிழில் “பானாகாத்தாடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் சமந்தா தன் கணவர் நாகசைதன்யாவுடன் “மஜிலி”படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் “மஜிலி” படத்தின் டீஸர் வெளியானது.டீஸரில் நாகசைதன்யா வேறு ஒரு நடிகைக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்றது. அதையும் சமந்தா சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
சமந்தா திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக சமந்தா கூறினார். குழந்தையை பற்றி நான் கூற முடியாது மேலும் தெரிந்து கொள்ள நாகசைதன்யா விடம் கேளுங்கள் என சமந்தா கூறியுள்ளார்.
இதுபற்றி சமந்தா மேலும் கூறுகையில் , ‘என் குழந்தை தான் எனது உலகம். இளம் வயதில் எனக்கு நடந்தது போல எனது குழந்தைக்கு தவறு ஏதும் நடக்காமல் நான் பார்த்து கொள்வேன்’ என நடிகை சமந்தா தனது குழந்தை பற்றி மனம் திறந்து அண்மையில் நடந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.