வேட்பாளரை தேர்ந்தெடுக்க நீடிக்கும் இழுபறி..காரணத்தை கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர்
- மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது.
- சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏன்? என்ற கேள்விக்கு இன்று பதில் அளித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காணும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சிவகங்கையில் மட்டும் இழுபறி நீடித்து வருவதால், அங்கு வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏன்? என்ற கேள்விக்கு இன்று பதில் அளித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.அதில்,சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்.குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு என ராகுல் முடிவு எடுத்திருக்கிறார். அதனாலேயே சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.