பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட காங்கிரசின் 3 வேட்பாளர்களை கடன் வாங்கும் எச்.டி. தேவேகவுடா
- உடுப்பி சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது.
- பா.ஜ.க எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் உடுப்பி சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது .இந்த மூன்று தொகுதிகளில் பா.ஜ.க எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.
அதனால் ,அந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா, பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் மத சார்பற்ற ஜனதா கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் மற்றும் கர்நாடக மாநில தலைவர் தினேஷ், குண்டுராவ் ஆகியோருடன் பேசி வருகிறார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடத்தில் ஒப்புதல் வாங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த 3 தொகுதிகளிலும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.