நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.
- அந்த பட்டியலில் தெலுங்கானாவில் 6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தில் 3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு வேட்பாளர் என ஒரு பட்டியலை வெளியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதி வேட்பாளர்களை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.
அதேபோல நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. அந்த பட்டியலில் தெலுங்கானாவில் 6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தில் 3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு வேட்பாளர் என ஒரு பட்டியலை வெளியிட்டது.
- தெலுங்கானாவில் அடிலாபாத் (தனி) தொகுதியில் சோயம் பாபு ராவ்
- தெலுங்கானாவில் பெடப்பள்ளி (தனி) தொகுதியில் எஸ். குமார்
- ஜாஹீராபாத் தொகுதியில் பனல லட்சும ரெட்டி
- ஐதராபாத் தொகுதியில் டாக்டர் பகவந்த் ராவ்
- செல்வெல்லா தொகுதியில் பி. ஜனார்தன ரெட்டி
- கம்மம் தொகுதியில் வாசுதேவ ராவ்
- கேரளா பத்தனம்திட்டா தொகுதியில் கே. சுரேந்திரன்
- உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பிரதீப் சவுத்ரி
- உத்தர பிரதேசத்தின் நாகினா (தனி) தொகுதியில் டாக்டர் யஷ்வந்த்
- உத்தர பிரதேசத்தின் புலந்த்சாஹர் (தனி) தொகுதியில் போலா சிங்
- மேற்கு வங்காளத்தின் ஜாங்கிபூர் தொகுதியில் மபூஜா கத்தூன்