சட்டமன்ற இடைத் தேர்தலோடு அமமுகவிற்கு மூடுவிழா : ராஜேந்திர பாலாஜி

Default Image
  • வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
  • இந்த தேர்தலோடு அமமுக விற்கு மூடுவிழா நடத்தி அனைவரும் அதிமுகவிற்கு வந்து விடுவிடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருவமான கிருஷ்சாமியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையில் உள்ள மெகா கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், இந்த தேர்தலோடு அமமுக விற்கு மூடுவிழா நடத்தி அனைவரும் அதிமுகவிற்கு வந்து விடுவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்