கேன் வில்லியம்சன் காயம் காரணமாக நீக்கம்? பயிற்சியாளர் பதில்.
- பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார்
- நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆட தயாராக இருக்கிறார்
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். இதனால் அவரால் பேட்டிங் அடைய முடியாது என என்று இருந்த நிலையில் வற்புறுத்தி ஆடினார்.
ஆனால் அது சரியாக அமைய வில்லை அதனால் சற்று ஓய்வு அளிக்கப்பட்டார் மூன்றாவது போட்டியில் அவரால் வர இயலவில்லை.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த முறை அவர் ஆடுவாரா? இல்லை முதல் ஓரிரு போட்டிகளில் தவற விடுவாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், இதற்கு அணியின் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் கூறுகையில், வில்லியம்சன் விரைவில் குணமாகி தற்பொழுது போட்டியில் ஆடும் அளவிற்கு குணமடைந்துள்ளார்.
இதனால் இவர் எந்த போட்டியும் தவற விடும் வாய்ப்பு இல்லை. நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆட தயாராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.