பி.எம்.டபிள்யு-வின் புதிய பைக் ஜி310

பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் ஆனது பைக் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.2018 ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்கபடுகிறது.

Leave a Comment