விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர்.
- விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கருமந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேட்பாளர்களை அதிமுக மாற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.