மோடி ஆட்சியில் 21,000 விவசாயிகள் தற்கொலை… கனிமொழி குற்றசாட்டு….
- அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.
- மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், விளம்பரச் செலவுக்காக மக்களின் வரிப்பணத்தில் நான்காயிரம் கோடி செலவு செய்தார் பிரதமர் மோடி என்றும் ஆனால், மழை வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்கமாட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், சமையல் எரிவாயு விலை உயர்வு, விவசாயிகளின் கடன் தொகையை தள்ளுபடி செய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்தொகையை தள்ளுபடி செய்துள்ளார் என மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.