திருவள்ளூர் சிதம்பரேஸ்வர் கோவிலில் திருக்கல்யாண மஹோற்சவம்
- திருவள்ளூரை அடுத்த தொட்டிகலையில் எனும் ஊரில் சமேத ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வர் கோவில் உள்ளது.
- பங்குனி மாதம் 7ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று இந்த கோவிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது
திருவள்ளூரை அடுத்த தொட்டிகலையில் எனும் ஊரில் சமேத ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பங்குனி மாதம் 7ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று இந்த கோவில் திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
காலை 8மணிக்கு அபிஷேகம்ஆரம்பமானது.அதனை தொடர்ந்து சமேத ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.அதற்கு பிறகு ஆராதனை திருக்கல்யாண திருவமுது முதலிய நிகழ்வுகள் நடை பெற்றது.
அதற்கு பிறகு மலை 6.00 மணிக்கு அம்மையார் பஞ்சமூர்த்திகள் பட்டின பிரவேச வீதி உலா நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரேஸ்வரின் அருளை பெற்றார்கள்.