1000 ருபாய் நோட்டுக்கு NO ENTRY
இந்நிலையில் அரசு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சிட்டு வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாயின. அத்தகைய யோசனை அரசிடம் இல்லை என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்தது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டன. ஆகஸ்ட் 25-ம் தேதி புதிதாக 200 ரூபாய் நோட்டு் வெளியிடப்பட்டது. ரூ. 500-க்கும் ரூ. 100-க் கும் இடையிலான இடைவெளியைப் போக்க புதிய 200 ரூபாய் வெளியிடுவதாக அறிவித்தது.
சமீபத்தில் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது. இதனிடையே 2,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் இது முற்றிலும் தவறு என்றும் அத்தகைய யோசனை அரசுக்கு இல்லை என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக கூறிவதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.