நெருங்கும் தேர்தல்!15 நாட்களுக்கு மேல் முடங்கி இருக்கும் பாஜக இணையதளம்
- பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது.
- இணையதளம் முடங்கி சரியாக 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை அதை மீட்க முடியாமல் திணறி வருகிறது பாஜக.
மக்களவை தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது.
இதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தனி இணையதள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலமாகவும் முக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்,அறிக்கையில் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது.இதனால் கட்சி தொடர்பான வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை.
ஆனால் இதனை அறிந்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணி தோல்வியிலே முடிந்து இருக்கிறது.
இணையதளம் முடங்கி சரியாக 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை அதை மீட்க முடியாமல் திணறி வருகிறது பாஜக.
ஆனால் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் We’ll be back soon! என்ற வார்த்தை மட்டுமே தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயருக்கு முன்னால் சவ்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றினார்.அதேபோல மத்திய மற்றும் மாநில பாஜக தலைவர்கள் தங்களை சவ்கிதார் என்று மாற்றினார்கள்.மேலும் சவ்கிதார் என்றால் நாட்டின் காவலன் என்று மோடி உட்பட மத்திய மற்றும் மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதேவேளையில் முடங்கிய இணையதளத்தை கூட பாதுகாக்க முடியாமல் பெயருக்கு முன்னால் மட்டும் நாட்டின் காவலன் என்று தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.