33 வேட்பாளர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் – சத்யபிரதா சாஹூ
- இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- இதுவரை 29 ஆண்கள், 1 பெண் என 30 பேர் மக்களவை தேர்தலுக்கும் , இடைத்தேர்தலில் போட்டியிட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல்.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதுவரை 29 ஆண்கள், 1 பெண் என 30 பேர் மக்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் , இடைத்தேர்தலில் போட்டியிட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.