வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் போட்ட விவசாயிகள்…..
- ஈரோட்டில் விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோட்டில் விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில், இப்பிரச்சனை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வராதது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.