காயம் காரணமாக சென்னை வேகப்பந்து வீச்சாளர் வெளியேற்றம்.. சமாளிக்குமா சென்னை அணி??
- பைனலுக்கு இதுவரை 7 முறை சென்று அதில் 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது.
- அதிகாரபூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார் லுங்கி இங்கிடி
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நடைபெற்ற அனைத்து சீசனிலும் பிளே – ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. குறிப்பாக, பைனலுக்கு இதுவரை 7 முறை சென்று அதில் 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது.நடப்பு சாம்பியன் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.தற்போது வீரர்கள் சென்னை அணிக்காக பயிற்சியிலும ஈடுபட துவங்கிவிட்டனர்.
கடந்த முறை தனது தந்தையை இழந்த காரணத்தினால் முதல் சில போட்டிகளை தவற விட்ட தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி இஞ்சிடி, பிறகு அணிக்கு மிக முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்நிலையில், தற்பொழுது அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை வந்துள்ளது.
இதற்கு அதிகாரபூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார் லுங்கி இங்கிடி. இது சென்னை அணிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும்.