தேர்தலுக்க நீரவ் மோடியை வைத்து நாடகம் ஆடும் பா.ஜ.க: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
- நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
நிரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்பித்து போக வழிவகை செய்தது யார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பாஜக அரசு தான நிரவ் மோடியை நாட்டை விட்டு தப்பிக்க உதவியது. தற்போது அவர்களே அவரை நாடு கடத்துகின்றனர். தேர்தலுக்காக மட்டுமே அவர் நாடு கடத்தப்படுகிறார். தேர்தலுக்கு பின்னர் அவரை அனுப்பி விடுவர் என்றார்.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா கூறுகையில், நிரவ் மோடி விவகாரத்தில் உண்மையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, பாஜக நன்மதிப்பை பெற்றுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. நிரவ் மோடி லண்டனில் இருப்பதை ‘தி டெலிகிராப்’ நாளிதழே வெளிக்கொண்டு வந்தது. பிரதமர் மோடியோ அவரது அரசின் கேள் இயங்கும் நிறுவனங்களோ இல்லை என்றார்.