இரண்டு சக்திகள் இணைந்துள்ளது…. இதற்கு இணையான சக்திகள் பூமியில் இல்லை : ஹெச்.ராஜா
- வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஹெச்.ராஜா பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியுள்ளார்.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக கட்சியுடன், பாஜக கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சி குறித்த பல விமர்சனனாகில் எழுந்து வருகிறது. மேலும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மற்ற காட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்.ராஜா பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, உலக புகழ் பெற்ற மோடியின் ஆட்சி, கஜா புயல் பாதிப்பை விரைந்து சீரமைத்த எடப்பாடி பழனிசாமி என இரண்டு சக்திகள் இணைந்துள்ளது. இதற்கு இணையான சக்திகள் பூமியில் இல்லை என அவர் கூறியுள்ளார்.