தோனி இல்லனா கோஹ்லி இல்ல.. ரிக்கி பாண்டிங்
- முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர்.
- கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2 – 3 என தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதனால், பல தரப்பட்ட விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது.
குறிப்பாக முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, “கோஹ்லி பேட்டிங்கில் தனது முழு திறமையை நிரூபித்து விட்டார். ஆனால், கேப்டன்சியில் அவர் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அவருடன் உலக கோப்பையை வென்ற, குறிப்பாக உலக கோப்பையை வென்ற அணிக்கு கேப்டனாக இருந்த தோனி இருப்பதால் தான் அவரால் முழுமையாக செயல்பட முடிகிறது. கடைசி இரண்டு போட்டிகளில் தோனி இல்லாததன் விளைவு தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது” என்றார்.
கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.