இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்து திமுக என்ன செய்தது..?
- பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி தமிழிசை செளந்தரராஜன் திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எனவும், அதில் பெண் வேட்பாளர்களும் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.