அமமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு…..

Default Image
  • தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்தும், பல விதிகளை விதித்துள்ளது.
  • மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை வழக்குப்பதிவு.

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்தும், பல விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகளை கருத்தில் கொண்டு செயல்படுமாறும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாகனங்கள் அனைத்தும், காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. சிம்மக்கல், தல்லாகுளத்தில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த போது தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக டேவிட் அண்ணாதுரை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்