இளைஞர்களை மிரட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் -அமித்ஷா விமர்சனம்
- கலபுர்கியில் தேர்தல் பிரசாரம் பிறகு கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்தார் ராகுல் காந்தி.
- அப்போது ராகுல் காந்தியுடன் கலந்துரையாட அனுமதிக்காததால் அங்குள்ள ஊழியர்கள், பா.ஜ.க.வினர் “மீண்டும் மோடி” என்று முழங்கி வரவேற்றனர்.
பெங்களூரு நாகவரா பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள மான்யதா தொழில் நுட்பப்பூங்கா. இப்பூங்காவில் 68 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை 5.30-மணிக்கு அந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப அறிஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுடன் அத்துறை சம்பந்தமான பிரச்சினைகளை அறிந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கலபுர்கியில் தேர்தல் பிரசாரம் பிறகு கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்தார் ராகுல் காந்தி.
அப்போது ராகுல் காந்தியுடன் கலந்துரையாட அனுமதிக்காததால் அங்குள்ள ஊழியர்கள், பா.ஜ.க.வினர் “மீண்டும் மோடி” என்று முழங்கி வரவேற்றனர்.
ராகுல் காந்தியின் கவனத்தை ஈர்க்க இது போல செயல்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராகுல்காந்திக்கு எதிராக முழக்கமிட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா தனது டுவிட்டரில் பக்கத்தில் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் இளைஞர்களை மிரட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என காங்கிரசை விமர்சித்துள்ளார்.