கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
- மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.
- கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் முதல்வராக இருந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர்
இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பின் நாடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பின் மூக்கில் சுவாச உபகரணகளோடு, மாநில சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கல் செய்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.
எதிர்க்கட்சியின் குற்றசாட்டு
இந்நிலையில், கட்சி தலைமையிடம் தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கட்சி தலைமை அவரை மாற்றவில்லை. இதையடுத்து, இவர் தொடர் சிகிச்சையில் இருந்ததால், அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.
பாரிக்கர் மரணம்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பாரிக்கரின் உடல் மிகவும் கவலைக்கிடமானது. பருகரிக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உடல் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், பேட்டியளித்த கோவா மாநில பாஜக தலைவர் வினோ டெண்டுல்கர், கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.