நியூசிலாந்து மசூதி தாக்குதலில் இறந்த 5 இந்தியர்களின் பெயரை இந்திய தூதரகம் வெளியிட்டது !!!
- மசூதிகளில் நடந்த தாக்குதலில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதி செய்தது.
- மெகபூப் கோகர், ரமீஷ் ஓரா, ஆசீப் ஓரா, அன்சி அலிபாவா மற்றும் ஒயாசிர் காதிர் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
நியூசிலாந்தின் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு மசூதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த தாக்குதலில் 50 பேர் இறந்தனர் என தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரன்ட் 28 என்பவரை போலீஸ் கைது செய்தது.இந்த சம்பவத்தில் 9 இந்தியர்கள் மாயமானதாக இந்திய தூதரகம் கூறியது.ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.
இந்நிலையில் மசூதிகளில் நடந்த தாக்குதலில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதி செய்தது.இறந்தவர்களின் பெயர்களை இந்திய தூதரக டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மெகபூப் கோகர், ரமீஷ் ஓரா, ஆசீப் ஓரா, அன்சி அலிபாவா மற்றும் ஒயாசிர் காதிர் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விரைந்து விசா வழங்கும் படி நியூசிலாந்து குடியுரிமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
With a very heavy heart we share the news of loss of precious lives of our 5 nationals in ghastly terror attack in #Christchurch
Mr. Maheboob Khokhar
Mr. Ramiz Vora
Mr. Asif Vora
Ms Ansi Alibava
Mr. Ozair Kadir@kohli_sanjiv @MEAIndia @SushmaSwaraj 1/3— India in New Zealand (@IndiainNZ) March 16, 2019