கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிசூடு எதிரொலி: துப்பாக்கி வைக்க புதிய சட்டம் கொண்ட வந்த நியுஸிலாந்து!

Default Image
  • நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். 
  • உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில, புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்ட விதிமுறைகளால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும் எனவும், இந்த சட்டம் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி…

  • காவல்துறையினர் மற்றும் பின்னணி சோதனைகளுக்கு பின்பே உரிமம் வழங்கப்படும்.
  • உரிமம் பெற 16-18 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை வைத்திருப்பவர் மட்டுமே உரிமம் வாங்க வேண்டும்.
  • ஆனால், அவர் எத்தனை துப்பாகிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது நிர்ணயிக்கப்படவில்லை.
  • அந்நாட்டு துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளின் படி, ஏழு குண்டுகள் வரை சுடும் செமி ஆட்டோமெட்டிக்  துப்பாக்கிகளை மட்டுமே உரிமம் பெற்று வைத்திருக்கலாம்.
  • உயர் சக்திவாய்ந்த துப்பாகிகளை வைத்திருக்க அனுமதி கிடையாது.
    உரிமமும் வழங்கப்பட மாட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்