கொல்கத்தா அணியில் இவர்கள் இருவருக்கு இடமா?? மாற்றம் ஏன்??
- கடந்த ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையை முடித்து விட்டு அப்படியே கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர்கள் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி.
- சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய கேரளா அணியை சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் அசத்திய கே.சி. காரியப்பா இருவரும் கொல்கத்தா அணி தேர்வாளர்கள் பார்வையில் பட்டனர்
கடந்த ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையை முடித்து விட்டு அப்படியே கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர்கள் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி.
இவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் இவர்களால் வருகின்ற ஐபிஎல் தொடரில் ஆடமுடியாது என அவர்களது உடல்தகுதி ஆலோசகர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் தட்டுப்பாடு கொல்கத்தா அணியில் ஏற்பட்டு விட்டதால், புதிய பந்துவீச்சாளர்களை தேடும் பணியில் இறங்கினர்.
இதற்கிடையில், சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய கேரளா அணியை சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் அசத்திய கே.சி. காரியப்பா இருவரும் கொல்கத்தா அணி தேர்வாளர்கள் பார்வையில் பட்டனர். பின்னர் அவர்களை அணியில் இணைத்துள்ளது நிர்வாகம்.