திமுகவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!!

Default Image
  • இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது.
  • சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து ஒப்புதல் அளித்தார். 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் உட்பட 91 மக்களவை தொகுதியில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

திமுக மற்றும் அதிமுக இரண்டும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மற்ற பகுதிகளை கூட்டணிக் கட்சிகள் பங்கிட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தல்  அதே தேதியில்தான் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஆதரவை திமுகவிற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து ஒப்புதல் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்